சென்னை: நடிகர் ஜெயப்பிரகாஷுடன் ஒன்றாக வாழ்வதாக கிளம்பியுள்ள செய்திகளை மறுத்துள்ளதோடு, இப்படி செய்தி பரப்பியவர்களுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.
பொற்காலம் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரும் இப்போது முன்னணி குணச்சித்திர நடிகருமான ஜெயப்பிரகாஷும், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஆரோகணம் படத்திலும் ஜெயப்பிரகாஷ் நடித்தார். சென்னையில் ஒருநாள் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தனர்.
இருவரும் நடுத்தர வயதுக்காரர்கள். இருவருக்கும் நெருங்கிய உறவு ஏற்பட்டு, இப்போது ஒன்றாக வசிப்பதாக திடீரென செய்தி கிளம்பியது. ட்விட்டரிலும் இதுகுறித்து சிலர் எழுதியிருந்தனர்.
இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் அளித்துள்ள விளக்கத்தில், "ஜெயப் பிரகாசும் நானும் இணைந்து வாழ்வதாக அவதூறு பரப்பியுள்ளனர். இது எனக்கு மனவேதனை அளிக்கிறது. இந்த வயதில் எனக்கெதற்கு காதல்? எனக்கு கணவர் இருக்கிறார். காதல் வந்தால் அவர்மேல்தான் வரும். இந்த அவதூறை பரப்பியவர் யார் என்பது தெரியும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment