மும்பை: உத்தரகண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் நடனமாட இருக்கிறார்.
உத்தரகண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர், நடிகைகள் நடனமாட இருக்கின்றனர். குழந்தை பெற்ற பிறகு நடிப்பு, டான்ஸ் ஆகியவற்றில் இருந்து ஒதுங்கி இருக்கும் ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து 7 மணிநேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடுகிறார்.
நல்ல காரணத்திற்காக நடக்கும் இந்த நிகழ்ச்சி வரும் 15ம் தேதி நடக்கிறது. டிவி சேனல் ஒன்று நடத்தும் இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் பணம் உத்தரகண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும்.
நல்ல காரியத்திற்காகத் தானே நடனமாடக் கேட்கிறார்கள், ஆடு என்று அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாவிடம் தெரிவித்தாராம்.
Post a Comment