சென்னை: சந்துருவுடனான காதல் காரணமாக இயக்குநர் சேரனுக்கு எதிராகத் திரும்பிவிட்ட மகள் தாமினி, இன்று மீண்டும் சேரனிடமே திரும்பி வந்துவிட்டார்.
காதலன் வேண்டாம். பெற்றோர்தான் வேண்டும் என அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாக்கு மூலம் அளித்ததால், சந்துரு தரப்பு மனுவை டிஸ்மிஸ் செய்தது நீதிமன்றம்.
தந்தை சேரனுடன் சந்தோஷமாகப் போவதாக மகள் தாமினி தெரிவித்தார்.
இரண்டு வாரங்கள் தனது பழைய பிரின்சிபால் வீட்டில் தங்கியிருந்தார் தாமினி. அப்போது அவரை சேரனின் திரையுலக நண்பர்கள் சந்தித்தனர். மேலும் தாமினிக்கு கவுன்சலிங் கொடுக்கப்பட்டது.
இறுதியில் தனக்கு இப்போது காதல் வேண்டாம் என்றும், தாய் தந்தையுடன் வாழ்வதே சிறந்தது என புரிந்து கொண்டதாகவும் தாமினி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் நீதிபதிகளிடம் தன் முடிவை தாமினி தெரிவித்தார்.
இந்த முடிவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு சேரனுடன் தாமினி செல்ல அனுமதித்தது. இதந் மூலம் தாமினி காதல் விவகாரம் முடித்து வைக்கப்பட்டது.
தன் தந்தையுடன் செல்வதாக தான் எடுத்த முடிவு தெளிவானது என்றும், எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்றும் தாமினி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
Post a Comment