சென்னை: சென்னையில் தலைவா படம் ஓடும் தியேட்டர் ஒன்றுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
விஜய்யின் தலைவா படம் கடந்த 9ம் தேதி ரிலீஸாக வேண்டியது. ஆனால் தலைவா படத்தை ரிலீஸ் செய்தால் குண்டு வெடிக்கும் என்று தியேட்டர்களுக்கு மிரட்டல் வந்தது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது.
அதன் பிறகு விஜய்யும், படக்குழுவினரும் பல்வேறு முயற்சி செய்து ஒருவழியாக படத்தை நேற்று ரிலீஸ் செய்தனர். படமும் பல்வேறு தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடுகிறது. இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் தலைவா படம் ஓடும் தியேட்டர் ஒன்றுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது.
அந்த கடிதத்தை பிரித்துப் படித்தால், தலைவா படத்தை திரையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று அதில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து மிரட்டல் கடிதம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Post a Comment