சென்னை: இனி என் படங்களில் தம்மடிக்கிற மாதிரி காட்சிகளே இருக்காது என இயக்குனர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து காமெடி படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்தவர்தான் ராஜேஷ். இதுவரை இவர் இயக்கிய மூன்று படங்களிலும் டாஸ்மாக் பார் காட்சிகள்தான் முக்கிய பங்கு வகித்தன.
காரணம், இவருடைய படங்கள் அனைத்தும் இளைஞர்களை குறிவைத்து எடுக்கப்படுவதால் மது, சிகரெட் போன்றவைதான் தவறாமல் இடம்பெறுகின்றன.
இப்போது தீபாவளியை முன்னிட்டு ராஜேஷ் இயக்கிய ஆல் இன் ஆல் அழகுராஜா படம் திரைக்கு வருகிறது.
இந்தப் படத்துல புகைப் பிடிப்பது போன்ற காட்சிகளே இடம் பெறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாராம் ராஜேஷ்.
இது குறித்து படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் ராஜேஷ், "இந்தப் படத்துலேயும் தம்மடிக்கிற, தண்ணியடிக்கிற சீன்ஸ் இருக்குமா?ன்னு நெறைய பேர் கேட்டாங்க, அந்தளவுக்கு என்னோட படம்னாலே அதுல இந்த ரெண்டுமே இருக்கும்னு முடிவு பண்ணிட்டாங்க...
ஆனா நல்லவேளையா இந்தப் படத்துல தம்மடிக்கிற காட்சி ஒண்ணு கூட இல்ல, ஏன்னா கதைப்படி அந்தமாதிரி காட்சிகளே தேவைப்படல. அதுமட்டுமில்லாமல் இனிமே என்னோட படங்கள்ல தம்மடிக்கிற சீன்களே இல்லாத மாதிரி காட்சிகள் அமைக்கப் போறேன்," என்றார் அவர்.
Post a Comment