சென்னை: விஜய் நடிக்கும் ஜில்லா படத்தின் கேரளா உரிமையை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் வாங்கியுள்ளார்.
ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில் நேசன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ஜில்லா. மதுரைக்காரராக வரும் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் காஜல் அகர்வால். இந்த படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.
அவரின் தந்தையாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிக்கிறார். மோகன் லால் படத்தில் தாதாவாக நடிக்கிறார். நீண்ட காலம் கழித்து பூர்ணிமா பாக்யராஜ் இந்த படம் மூலம் ரீ என்ட்ரி ஆகிறார்.
பொங்கலுக்கு ஜில்லா ரிலீஸ் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. இந்நிலையில் ஜில்லா படத்தின் கேரளா உரிமையை வாங்க கடும் போட்டி நடந்தது. அதில் இறுதியாக மோகன் லாலின் ஆசீர்வாத சினிமாஸ் உரிமையை வாங்கியுள்ளது.
விஜய் படங்களுக்கு கேரளாவில் எப்பொழுதுமே மவுசு உண்டு. இந்நிலையில் இந்த படத்தில் மோகன் லாலும் நடித்திருப்பதால் ஜில்லாவுக்கு கேரளாவில் கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
Post a Comment