அஜித்-கௌதம் மேனன் இணையும் புதிய படத்தின் பூஜை வருகிற 6ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது.
வீரம் படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் புதிய படத்தை கௌதம் மேனன் இயக்குகிறார். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக, முதல் முறையாக நடிக்கிரார் அனுஷ்கா.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏ.எம். ரத்னம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இன்னமும் பெயர் சூட்டப்படவில்லை. படத்தின் திரைக்கதையை முழுமையாக முடித்துவிட்டதால், வருகிற பிப்ரவரி 6-ஆம் தேதி பூஜை போடுகிறார்கள்.
வழக்கமாக தனது படங்களிந் பூஜையை வியாழக்கிழமை அன்றுதான் வைப்பார் ரத்நம். ஆரம்பம் படத்துக்கும் அப்படித்தான் நடந்தது.
அந்த சென்டிமென்ட்படியே தற்போது அஜித்தின் படத்தையும் பிப்ரவரி 6-ஆம் தேதி வியாழக்கிழமை அன்றே துவங்குகிறார்கள்.
முற்றிலும் வெளிநாட்டில் படமாகவுள்ளது இந்தப் படம்.
Post a Comment