இனி என் படங்களில் சரக்கடிக்கும் காட்சிகளே இருக்காது - உதயநிதி

|

இனி என் படங்களில் சரக்கடிக்கும் காட்சிகளே இருக்காது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் கதை இருக்கிறதோ இல்லையோ... கண்டிப்பாக டாஸ்மாக்கில் அல்லது பாரில் சரக்கடிக்கும் காட்சி கட்டாயம் இருக்கும்.

இனி என் படங்களில் சரக்கடிக்கும் காட்சிகளே இருக்காது - உதயநிதி

குறிப்பாக காமெடி என்ற பெயரில் குடித்துவிட்டுக் கூத்தடிப்பதைத்தான் இன்றைய படங்களில் அதிகமாகப் பார்க்க முடிகிறது.

விஜய், அஜீத் உட்பட முன்னணி நடிகர்களை தங்கள் ஹீரோவாகப் பார்க்கும் ரசிகர்கள், அவர்கள் திரையிலும் திரைக்குப் பின்னாலும் நல்ல விஷயங்களை விட்டுவிட்டு, மோசமான விஷயங்களைப் பின்பற்ற ஆரம்பித்துவிடுகின்றனர்.

எனவே இந்த ஹீரோக்கள் மது அருந்துவது, புகை பிடிப்பது உள்ளிட்ட காட்சிகளை படங்களில் தவிர்க்க வேண்டும் எனறு பல்வேறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலி இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த இரண்டிலுமே மது அருந்தும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக ஒரு கல் ஒரு கண்ணாடியில் பெருமளவு இந்த மாதிரி காட்சிகள் இருந்தன.

ஆனால் இனி தான் நடிக்கும் படங்களில் மது அருந்தும் காட்சிகள் கண்டிப்பாக இடம்பெறாது என உதயநிதி ஸ்டாலின் உறுதி கூறியுள்ளார்.

'நான் பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து வந்தவன். ஆகையால் சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாக இருக்க கூடாது.

எனவே இனி என்னை வைத்து படம் இயக்கும் இயக்குநர்களிடம் இனிமேல மது அருந்துவது போன்ற காட்சியில் கண்டிப்பாக இனிநடிக்க மாட்டேன் என்பதை தெரிவித்துள்ளேன். இனி நான் நடிக்கும் படங்களில் மது அருந்தும் காட்சிகள் இருக்காது,' என்றார் உதயநிதி.

 

Post a Comment