மும்பை: மூத்த ஹிந்திப் பட வில்லன் நடிகரான ரஞ்சித் வீட்டு நீச்சல் குளத்தில் அவரது கார் டிரைவரின் சடலம் மீட்கப் பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஹிந்திப் படங்கள் பலவற்றில் வில்லனாக நடித்திருப்பவர் நடிகர் ரஞ்சித். கடந்த 30 ஆண்டுகளாக இவரது கார் டிரைவராக பணி புரிந்து வந்தவர் கர்நாடகாவைச் சேர்ந்த நாக்ராஜ் கவுடா(44) என்பவர். இவரது சடலம் நேற்று ரஞ்சித் வீட்டு நீச்சல் குளத்தில் மிதந்தது கண்டு பிடிக்கப் பட்டது.
இது குறித்து ரஜ்சித் கூறுகையில், ‘நேற்றிரவு எங்கள் வீட்டு நீச்சல் குளத்தில் நாக்ராஜ் உடல் மிதப்பது தெரிய வந்தது. உடனடியாக நாக்ராஜின் உடலை நீரில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால், முன்னதாகவே நாக்ராஜ் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்' எனக் கூறியுள்ளார்.
மேலும், நாக்ராஜ் எங்கள் குடும்பத்தில் ஒருவராக பழகி வந்தார். எங்களுக்கு இன்றும் புரியவில்லை இது தற்கொலை அல்லது விபத்தா என்று. மேலும், தனது சகோதரர் மற்றும் மகனுடன் அறையில் இருந்த நாக்ராஜ் எதற்காக அவர்களுக்குத் தெரியாமல் வெளியே வந்தார், எவ்வாறு தண்ணீரில் விழுந்தார் என்பது மர்மமாகவே உள்ளது' எனத் தெரிவித்துள்ளார் நாக்ராஜ்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நாக்ராஜின் மரணம் கொலையா, தற்கொலையா அல்லது விபத்தா என அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை கிடைத்த தகவலின் படி, உடல்நலக் கோளாறால் பாதிக்கப் பட்டிருந்த நாக்ராஜ், டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்ததாகத் தெரிகிறது.
சமீபத்தில் மற்றொரு பாலிவுட் நடிகர் வீட்டு நீச்சல் குளத்தில் சிசு ஒன்றின் உடல் கண்டெடுக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment