மும்பை: மணிரத்னம் படத்தில் மீண்டும் நடிப்பது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய்.
2011-ல் பெண் குழந்தை பிறந்ததிலிருந்து சினிமாவில் நடிக்காமல் இருந்தார் ஐஸ்வர்யா ராய். குழந்தையை வளர்ப்பதில் கவனம் செலுத்தினாலும், மீண்டும் ஒப்பனை அறைக்குள் நுழையும் தருணத்துக்காகக் காத்திருந்தார்.
இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். குழந்தை பெற்றதால் குண்டாகியிருந்த உடம்பை மீண்டும் மெலிய வைத்துள்ள ஐஸ்வர்யா, தான் இன்னும் அதே அழகுடன் இருப்பதை நிரூபிக்க, சமீபத்தில் கேன்ஸ் பட விழாவில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தார்.
தனது சினிமா மறுபிரவேசம் குறித்து ஐஸ்வர்யா ராயே இப்படி பேட்டியளித்துள்ளார்:
அடுத்து இரு முக்கியப் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளேன். அதில் ஒரு படத்தை இயக்கப் போகிறவர் மணிரத்னம்.
அவர் சிறந்த இயக்குநர். என்னை வைத்து இரு படங்களை ஏற்கனவே அவர் இயக்கியுள்ளார். மீண்டும் மணி ரத்னம் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தியில் சஞ்சய் குப்தா இயக்கும் புதிய படத்திலும் நடிக்கிறேன்.
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Post a Comment