திருமணத்துக்குப் பிறகு நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன்! - அமலா பால்

|

நல்ல கதை அமைந்தால் திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன், என்று அறிவித்துள்ளார் நடிகை அமலா பால்.

நீண்ட காலமாக காதலித்து வந்த நடிகை அமலா பாலும், இயக்குநர் விஜய்ய்யும் வருகிற ஜூன் 12-ந் தேதி திருமணம் செய்து கொள்கிறார்கள்.

திருமணத்துக்குப் பிறகு நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன்! - அமலா பால்

பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணம் இது. சென்னை சாந்தோம் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் இவர்களது திருமணம் நடக்கிறது.

தங்கள் திருமணம் குறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேச ஏற்கெனவே மூன்று முறை விஜய்யும், அமலா பாலும் திட்டமிட்டு, ரத்தானது.

இன்று ஒருவழியாக பிரஸ் மீட் வைத்துவிட்டனர்.

அமலாபால் பேசும்போது, ‘‘திருமணத்துக்கு பிறகு நடிக்க வேண்டாம் என்று என்னை விஜய் தரப்பில் வற்புறுத்தவில்லை. நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன்,'' என்றார்.

இருவரின் காதலுக்கும் விஜய் சொன்ன விளக்கம் பலே ரகம்... அதை தனி செய்தியாகத் தருகிறோம்!

 

Post a Comment