சென்னை :உட்கட்சிப் பூசலால் சமீபத்தில் பூ நடிகை முன்னணி அரசியல் கட்சியிலிருந்து திடீரென வெளியேறினார். உடனே, பூ அடுத்ததாக இந்தக் கட்சிகளில் இணையலாம் என அவரது அபிமானிகள் ஒரு பட்டியலை வெளியிட்டு விவாதித்தனர். ஆனால், சில காலம் ஓய்வெடுக்கப் போகிறேன் என அறிவித்தார் பூ.
அதன்படி, குடும்பத்துடன் சுற்றுலா என மேடம் பிசியாக இருக்கிறார். ஆனபோதும், நடிகை இலைக் கட்சிக்குத் தாவலாம் என்ற தகவலும் அரசல் புரசலாக வெளியாகியுள்ளது.
ஏனெனில், முன்னர் அக்கட்சியின் தொலைக்காட்சி நிகழ்ச்சியை அம்மணி தான் தனது வித்தியாசமான ஆடைகள் மூலம் பிரபலப்படுத்தினார். அப்போதே அவர் இலையோடு சேர்வார் எனக் கூறப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்புக்களை திசைதிருப்பி அவர் சகோதரச் சண்டைக் கட்சியில் களமிறங்கினார்.
இந்நிலையில், மீண்டும் வருகிறேன் என அவர் கூறினால் இலைக் கட்சி மேலிடம் நிச்சயமாக மறுக்கப் போவதில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், பூ எங்கே இலையோடு இணைந்து விடுவாரோ என்ற அச்சத்தில் இருப்பவர் மிஸஸ் நாட்டாமை தானாம்.
சூரிய தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை மனைவி வழங்கிக் கொண்டிருக்க, நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும் என மதர் புகழ் பாடி வருகிறார் அவரது நாட்டாமைக் கணவர். எப்படியும் மதரின் மனதில் இடம் பிடித்தே தீருவோம் என தீவிரமாக இருவரும் போராடிக் கொண்டிருக்க, ‘காத்திருந்தவன் மாட்டை நேற்று வந்தவன் ஓட்டிக் கொண்டு போனது போல' இடையில் புகுந்து பூ ஆட்டத்தைக் கலைத்து விடுவாரோ என்ற மிஸஸ் நாட்டாமை அச்சப்படுகிறாராம்.
தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி.. மல்லிகைக் கொடி உந்தன் மனதில் என்னடி .. என்று பாட்டுப் பாடியபடி இருக்கிறாராம் மிஸஸ் நாட்டாமை!
Post a Comment