தீபாவளிக்குப் பிந்தைய இந்த வாரத்தில் நான்கு சிறிய படங்கள் வெளியாகின்றன. இந்தப் படங்களுக்கு குறைந்த அளவு அரங்குகளே கிடைத்துள்ளன.
வாரத்துக்கு சராசரியாக நான்கு படங்கள் ரிலீஸ் என்பது உறுதியாகிவிட்டது.
தீபாவளி முடிந்த ஒரு வாரம் ஆன நிலையில் இந்த வெள்ளிக்கிழமையும் நான்கு படங்கள் வெளியாகியுள்ளன.
அவை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள நெருங்கி வா முத்தமிடாதே, ஆனந்த் பாபு மகன் கஜேஷ் நடித்த கல்கண்டு, சோக்கு சுந்தரம், காதலுக்கு கண்ணில்லை ஆகிய படங்கள்.
இவற்றில் நெருங்கி வா முத்தமிடாதே படம் மட்டும் ஓரளவு கணிசமான அரங்குகளைப் பெற்றுள்ளது.
மற்ற படங்களுக்கு அவ்வளவாக தியேட்டர்கள் கிடைக்கவில்லை. கிடைத்த அரங்குகளில் வெளியிட்டுள்ளனர்.
தீபாவளிக்கு வெளியான கத்தியும், பூஜையும் இன்னும் பெரும்பாலான அரங்குகளில் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் அடுத்த வாரம்தான் புதுப் படங்களுக்கு ஓரளவு அரங்குகள் கிடைக்கும்.
Post a Comment