மும்பை: பாலிவுட் நடிகை சோஹா அலி கான் தனது காதலரும், நடிகருமான குனால் கேமுவை வரும் 25ம் தேதி பதிவு திருமணம் செய்து கொள்கிறார்.
பாலிவுட் நடிகர் சைப் அலி கானின் தங்கையும், நடிகையுமானவர் சோஹா அலி கான். 36 வயதாகும் சோஹாவும், 31 வயதாகும் நடிகர் குனால் கேமுவும் பல ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் காதல் நகரமான பாரீஸுக்கு சென்ற இடத்தில் குனால் சோஹாவின் விரலில் மோதிரத்தை மாட்டிவிட்டு திருமணத்தை நிச்சயம் செய்தார். ஆனால் அவர்களின் திருமண தேதி தான் முடிவாகாமல் இருந்தது.
இந்நிலையில் சோஹாவும், குனாலும் வரும் 25ம் தேதி சிறப்பு திருமண சட்டத்தின்படி பதிவு திருமணம் செய்து கொள்கின்றனர். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். இந்த திருமணத்திற்கு அவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.
நடிகை ஷர்மிளா தாகூர் தனது மகள் சோஹாவுக்கு திருமண பரிசாக அளிக்க 2012ம் ஆண்டிலேயே மும்பையில் ரூ.9 கோடிக்கு வீடு வாங்கி வைத்துள்ளார். நவாப் குடும்பத்தைச் சேர்ந்த சோஹாவின் திருமணம் படாடோபமாக நடக்காமல் மிகவும் எளிமையாக நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment