மீண்டும் தூசு தட்டப்படும் புலன் விசாரணை பாகம் 2

|

பல ஆண்டுகளுக்கு முன் தயாராகி இன்னும் கிடப்பில் உள்ள புலன் விசாரணை படத்தின் இரண்டாம் பாகத்தை தூசு தட்ட ஆரம்பித்துள்ளனர் படத்தின் இயக்கநரும் தயாரிப்பாளரும்.

விஜயகாந்த், ரூபிணி ஜோடியாக நடித்து 1990ல் ரிலீசாகி பெரும் வெற்றி பெற்ற படம் ‘புலன் விசாரணை'. இந்தப் படத்தை இயக்கிய ஆர்கே செல்வமணி, அதன் இரண்டாம் பாகத்தை இயக்கினார்.

இதில் பிரசாந்த் நாயகனாக நடித்தார். ஆனால் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.

இப்போது படத்தை வெளியிட முயன்று வருகின்றனர்.

மீண்டும் தூசு தட்டப்படும் புலன் விசாரணை பாகம் 2

இப்படம் குறித்து ஆர்கே செல்வமணி கூறுகையில், "ஆட்டோ சங்கர் கதையை மையமாக வைத்து ‘புலன் விசாரணை' படத்தை எடுத்து இருந்தேன். ஆட்டோ சங்கர் கேரக்டரில் ஆனந்தராஜ் வந்தார். தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறேன்.

இதில் ஆட்டோ சங்கர் ஜெயிலில் இருந்து தப்புவதுபோல் காட்சி துவங்குகிறது. அவனை பிடிக்க வரும் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நாயகனாக பிரசாந்த் நடிக்கிறார். நாயகியாக கார்த்திகா நடிக்கிறார். அஸ்வினி, பிரமிட் நடராஜன் ஆகியோரும் நடிக்கின்றனர். ஆர்.கே. வில்லனாக வருகிறார்.

பெட்ரோலியத்தை கண்டுபிடித்து எடுக்கும் முயற்சியில் நடக்கும் ஒரு குற்றத்தை மையமாக வைத்து ‘புலன் விசாரணை 2-ம் பாகம்' தயாராகிறது. பெட்ரோலிய கிணறு பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. மாலத்தீவிலும் முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

படத்தின் இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன. விரைவில் ரிலீசாக உள்ளது," என்றார்.

படத்துக்கு ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைக்கிறார்.

ராஜாராஜன், எம்.வி.பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்கின்றனர். ராவுத்தர் தியேட்டர் பிரைவேட் லிமிடெட் சார்பில் மன்சூர் அம்பலம் தயாரிக்கிறார்.

 

Post a Comment