அஜீத்தின் என்னை அறிந்தால் படம் வரும் ஜனவரி 29-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இதனை தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் நடித்துள்ளார். படத்தில் நாயகிகளாக அனுஷ்கா, திரிஷா நடித்துள்ளனர். இந்த படத்தில் அருண் விஜயும் நடித்து உள்ளார்.
அஜீத்தின் 'என்னை அறிந்தால்' திரைப்படம் பொங்கல் தினத்தன்று ஷங்கரின் 'ஐ' படத்தோடு மோதும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பட வேலைகள் முடியாததால் ஜனவரி 29ஆம் தேதிக்கு திடீரென தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஜனவரி 29ஆம் தேதி அஜீத் படம் போட்டியின்றி தன்னந்தனியாக வெளியாகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து என்னை அறிந்தால் பட தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கூறுகையில், "என்னை அறிந்தால் படத்தின் இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. ஜனவரி 21-ந்தேதி படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். வருகிற 29-ந்தேதி நிச்சயம் படம் ரிலீசாகும்," என்றார்.
Post a Comment