என்னை அறிந்தால் படத்தின் 6 நிமிட காட்சிகள் குறைப்பு

|

அஜீத் நடிப்பில் வெளியாகியுள்ள என்னை அறிந்தால் படத்தின் 6 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டு, ட்ரிம் செய்யப்பட்டுள்ளது.

அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள ‘என்னை அறிந்தால்' படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

என்னை அறிந்தால் படத்தின் 6 நிமிட காட்சிகள் குறைப்பு

‘என்னை அறிந்தால்' படம் குறித்து ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பாசிட்டிவான விமர்சனங்கள் எழுந்தாலும், படத்தின் நீளம் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் வந்துள்ளன.

படத்தின் முன்பாதி சற்று நீளமாக இருப்பதால், அதனை கொஞ்சம் குறைத்தால் விறுவிறுப்பாக ரசிக்கும்படியாக இருக்கும் என அனைவரும் கூறியுள்ளதால் படத்தின் நீளத்தைக் குறைக்க படக்குழுவினர் முடிவு செய்தனர்.

இதையடுத்து, இன்று முதல் படத்தின் முதல் பாதியில் 6 நிமிடங்கள் வரை காட்சிகளை குறைத்துள்ளார்களாம்.

2 மணி 48 மணி நேரம் ஓடிய படம் தற்போது 2 மணி 42 மணி நேரம் வரை ஓடக்கூடியதாக ட்ரிம் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் வந்த பெரிய படங்கள் அனைத்துமே கிட்டத்தட்ட 3 மணி நேரம் கொண்டதாக இருந்தன. இவை வெளியான பிறகு சில நிமிட காட்சிகள் குறைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது.

 

Post a Comment