காஞ்சீபுரம்: சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்துமார் நேற்று காஞ்சி சங்கர மடத்துக்குச் சென்று விஜயேந்திரரிடம் ஆசி பெற்றார்.
முன்னதாக அங்குள்ள காஞ்சி மகா பெரியவர் பிருந்தாவனத்தில் சில நிமிடம் தியானம் செய்தார். பிறகு சங்கராச்சாரியார் விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார்.
பின்னர் சங்கர மடத்தில் இருந்து வெளியே வந்த சரத்குமார் நிருபர்களிடம் கூறுகையில், "நீண்ட நாட்களாக காஞ்சீபுரம் சங்கரமடத்திற்கு வந்து தியானம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எங்கள் கட்சியைச் சேர்ந்தவரின் இல்ல நிகழ்ச்சி செங்கல்பட்டில் நடந்தது. அதற்காக செங்கல்பட்டு வந்த நான் காஞ்சீபுரத்திற்கு வந்தேன்.
விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றேன். மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
அரசின் சாதனைகள் குறித்து அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் ஸ்ரீரங்கத்தில் பிரசாரம் மேற்கொண்டேன். மேலும் ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏராளமான திட்டங்களை வாரி வழங்கி உள்ளார். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி," என்றார்.
Post a Comment