ஹைதராபாத்: விடிய விடிய விருந்து வைத்து கலாட்ட செய்ததாக தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான ராம் சரண் மீது பக்கத்து வீட்டுக்காரர்கள் புகார் அளித்துள்ளனர்.
நடிகர் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் வீடு ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு நண்பர்களுக்கு அவர் 'சனிக்கிழமை விருந்து' கொடுத்தார்.
இந்த விருந்து நிகழ்ச்சி வீட்டு மொட்டை மாடியில் நடந்தது. ஸ்ரீகாந்த் ரெட்டி மற்றும் நடிகர், நடிகைகள், நண்பர்கள் கலந்து கொண்டனர். விடிய விடிய இந்த மது விருந்து நடந்தது. அப்போது ஒரே கூச்சலாக இருந்தது. இது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஒலி பெருக்கியில் சத்தமாக பாட்டுப் போட்டு ஆடியுள்ளனர்.
அதிகாலை 4 மணி வரை இந்த விருந்து களியாட்டங்கள் நடந்தன. இதனால் அக்கம் பக்கத்தினர் தூக்கமிழந்து தவித்தனர்.
உடனே போலீசில் புகார் தெரிவித்தனர்.
ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் இரு கான்ஸ்டபிள்கள் விரைந்து வந்து ராம்சரணிடம் விசாரித்தனர். ஆனால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
Post a Comment