‘கொம்பன்' பட பிரச்சினையில் என் பெயரை இழுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
கொம்பன் படத்துக்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு காட்டியதன் பின்னணியில் உதயநிதி இருப்பதாக சிலர் செய்தி பரப்பினர்.
உதயநிதியின் நண்பேன்டா படம் இன்று ரிலீசாவதால் இப்படி செய்வதாக சிலர் கூறிவந்தனர்.
இந்தப் பேச்சுக்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் உதயநிதி.
அதில், "ஒரு சமூகத்தை பெருமைப்படுத்தி படம் எடுக்கும்போது, அது இன்னொரு சமூகத்தை பாதிப்பதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. தேவர் மகன், விருமாண்டி படங்களின் போது கமலுக்கே அந்த நிலை வந்தது.
‘தலைவா' படத்தின்போது விஜய்க்கு பிரச்சினை வந்தது. இப் போது ‘கொம்பன்' படத்துக்கும் இந்த பிரச்சினை வந்திருக்கிறது.
‘கொம்பன்' படத்தின் ரிலீஸுக்கு நான் தடையாக இருப்பதாக சிலர் கூறிவருகிறார்கள். விளம்பரத்துக்காகத்தான் என் பெயரை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஒரு மாதத்துக்கு முன்பே என் படத்தை ரிலீஸ் செய்யும் தேதியை நான் அறிவித்து, 275 தியேட்டர்களுடன் ஒப்பந்தமும் போட்டுள்ளேன்.
எனவே ‘கொம்பன்' படம் வந்தாலும், வராவிட்டாலும் எனக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கப் போவதில்லை. அதனால் இதில் என் பெயரை இழுப்பது கண்டிக்கத்தக்கது," என்றார்.
Post a Comment