நான் விபத்தில் சிக்கினேனா?: சிவகார்த்திகேயன் விளக்கம்

|

சென்னை: தான் விபத்தில் சிக்கி காயம் அடையவில்லை என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சின்னத் திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து வெற்றிக் கொடி நாட்டியுள்ளவர் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் அண்மையில் வெளியான காக்கிச் சட்டை ஹிட்டாகியுள்ளது. அந்த சந்தோஷத்தில் அவர் ரஜினிமுருகன் படத்தில் தெம்பாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டதாகவும், அதில் சிவா காயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த செய்தி சிவகார்த்திகேயன் காதுகளையும் எட்டியது. உடனே அவர் ட்விட்டரில் இது பற்றி விளக்கம் அளித்து ரசிகர்களுக்கு தெம்பை அளித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது,

என்னை பற்றி வதந்தியை படித்தேன். நான் நலமாக உள்ளேன். மதுரையில் ரஜினிமுருகன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளேன். ஏப்ரல் 25ம் தேதி பர்ஸ்ட் லுக்கிற்கு தயாராகி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

முன்பும் கூட சிவா விபத்தில் சிக்கியதாக செய்தி வெளியானது. அதை பார்த்து பலரும் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர். அதன் பிறகு தான் அவர் விபத்தில் சிக்கியதாக வெளியான தகவல் பொய் என்பது தெரிய வந்தது.

 

Post a Comment