100 நாட்களைக் கடந்த அநேகன்!

|

சென்னை: முதல் முறையாக ஏ.ஜி.எஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் எடுத்த படம் 100 நாட்களைக் கடந்து சாதனை புரிந்துள்ளது. ஆமாம் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அநேகன் படம் தான் அது. 30 கோடியில் உருவான இந்தப் படம் இதுவரை சுமார் 50 கோடிகளை அள்ளியிருக்கிறதாம்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த அநேகன் படம் சென்னையில் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓதியுள்ளது. வேலை இல்லாப் பட்டதாரி படத்திற்குப் பின் தனுஷுக்கு கிடைத்த இரண்டாவது வெற்றி மாற்றான் தோல்விக்குப் பின்னர் கே.வி.ஆனந்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று தொடர்கிறது இந்தப் பட்டியல்.

Dhanush’s Anegan Reaches 100 Days

அமைரா தஸ்தூரை தமிழுக்கு அழைத்து வந்தது, நடிகர் கார்த்திக்கின் ரீ-என்ட்ரிக்கு அடித்தளமிட்டது, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வெளிவந்த பாடல்கள் ஹிட்டானதால் அவருக்கும் உற்சாகத்தை அளித்தது என அநேகனால் வெற்றிப் பாதைக்கு திரும்பிய அனைவருக்கும் இந்த 100 வெற்றியானது மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

போன மாசம் சன் டிவியில இந்தப் படத்த பாத்ததா...ஞாபகம்...!

 

+ comments + 1 comments

Anonymous
24 May 2015 at 01:07

Can you tell in which theater it runs for 100 days. Crap people. If hero tells, then the film runs. You media at least check and release the article. More dumb people are in Tamil media and websites.

Post a Comment