'தல' கையால் பிரியாணி சாப்பிட்ட சுருதி ஹாசன்!

|

சென்னை: தல கையால் சமைத்து பிரியாணி சாப்பிட்ட நடிகைகளில் புதிதாக இணைந்திருக்கிறார் நடிகை சுருதி ஹாசன்.வழக்கமாக அஜித் தன் படப் பிடிப்பில் பணிபுரியும் அனைவர்க்கும் தனது கையாலேயே பிரியாணி சமைத்து அன்புடன் பரிமாறுவார்.

அதே போல தலையின் 56 வது படத்திலும் பிரியாணி அரங்கேற்றம் நடந்துள்ளது, இந்த முறை புகழ்ந்திருப்பவர் நடிகை சுருதி ஹாசன் அஜித் சமைத்துப் போட்ட பிரியாணியை வாழ்நாளிலே மறக்க முடியாது என்ற ரேஞ்சுக்கு புகழ்ந்து தள்ளி இருக்கிறார் தனது ட்விட்டர் பக்கத்தில்.

அஜித் ஒரு சிறந்த மனிதர் என்று தெரியும் ஆனால் அவரின் சமையலும் சிறப்பாக இருந்தது, அஜித்துடன் வேலை செய்தது மறக்க முடியாத ஒன்று டிவிட்டி இருக்குது பொண்ணு.

நல்ல சமைக்கத் தெரிஞ்ச ஒருத்தரா பார்த்து கல்யாணம் பண்ணிக்கம்மா...!

 

Post a Comment