சென்னை: நாங்க ரெண்டு பெரும் நல்ல நண்பர்கள் என்று என்னதான் வெளியில் சொல்லிக் கொண்டாலும் நடக்குற விஷயங்கள வச்சுப் பாத்தா அப்படி ஒன்னும் தெரியலையே பாஸ்..
விஷயம் இதுதான் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவர இருக்கும் ரஜினி முருகன் படத்தோட ஆடியோ ரிலீஸ் ஜூலை 7 ம் தேதின்னு ஏற்கனவே சொன்னதுபோல ரஜினி முருகன் படக்குழு முறைப்படி அறிவிச்சிட்டாங்க.
அதே தேதியில தான் நானும் ஆடியோவ ரிலீஸ் பண்ணுவேன்னு அடம்புடிக்கிறாரு மாரி தனுஷ். அது மட்டும் இல்லேங்க படத்தையும் ஒரே நாள்ல ரிலீஸ் பண்ணப் போறாங்களாம்.
நல்லாத் தானே போய்ட்டு இருந்துச்சி திடீர்னு என்னனு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் அப்படியே ஷாக் ஆகிட்டாங்க. 3 படத்தில நடிகர் தனுசின் நண்பனாக அறிமுகமான சிவகார்த்திகேயன், தனுஷ் சொந்தமா தயாரிச்ச எதிர்நீச்சல் படத்துல கதாநாயகனா அறிமுகம் ஆனாரு.
நடிச்ச 6 படத்துலேயே தமிழின் முன்னணி நடிகரா ஆகிட்டாரு சிவா, இடையில ரெண்டு பேருக்கும் சண்டைனு நியூஸ் வந்தப்ப எல்லாம் எங்களுக்குள்ள அப்படி ஒன்னும் இல்லப்பானு சிரிச்சிட்டே போட்டோவுக்கு போஸ் கொடுத்தது எல்லாம் பொய்யின்னு நேத்து தெரிஞ்சிடுச்சி.
ஆமா ரஜினி முருகன் படம் ரிலீஸ் ஆகப் போற ஜூலை 17 ம் தேதி மாரி படமும் ரிலீஸ் ஆகப் போகுது. இதனால நண்பர்கள் ரெண்டு பேரும் வெள்ளித்திரையில முதல் முறையா மோதப் போறாங்க அதுமட்டுமில்லாம ரஜினி முருகனுக்கு போட்டியா மாரியோட ஆடியோவ ரிலீஸ் பண்ற விசயத்த நேத்து போற போக்குல சொல்லிட்டு போய்ட்டாரு தனுஷ்.
அவசர அவசரமா இப்படி ஆடியோவையும் படத்தையும் ரஜினி முருகன் படத்துக்குப் போட்டியா வெளியிடறதுக்கு காரணம் காரணம் சிவகார்த்திகேயன தன்னோட போட்டியாளரா நெனைக்கிறது தானேன்னு பேசிக்கிறாங்க விஷயம் தெரிஞ்சவங்க.
போட்டின்னு வந்தாச்சி அப்புறம் என்ன பாஸ் மோதிப் பாத்துட வேண்டியதுதானே...!
Post a Comment