டிவிட்டரில் 10 லட்சம் பாலோயர்கள்... சிவ கார்த்திகேயன் சாதனை!

|

சென்னை: சமூக வலைத்தளமான டிவிட்டரில் 10 லட்சம் பாலோயர்களைத் தொட்டு இளம் நடிகர் சிவகார்த்திகேயன் சாதனை புரிந்து இருக்கிறார்.

நடிகர்களில் ரஜினி, அவரது மருமகன் தனுஷ் மற்றும் நடிகர் சித்தார்த் ஆகியோருக்கு அடுத்து 10 லட்சம் பாலோயர்களைத் தொட்டிருக்கிறார் நடிகர் சிவா.

ஏற்கனவே இவர் விஜய் டிவியில் நடத்தி வந்த அது இது எது நிகழ்ச்சியை யூ டியூபில் இன்னும் பல லட்சம் பேர் தொடர்ந்து கண்டு கண்டு களித்து வருகின்றனர்.

தமிழ் திரை உலகில் நடிகர் தனுசால் கதாநாயகனாக எதிர்நீச்சல் படத்தில் அறிமுகம் செய்யப் பட்ட நடிகர் சிவகார்த்திகேயன். தனது நகைச்சுவை நடிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து இந்த சாதனையைத் தொட்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இவரின் தாக்கம்எந்த அளவுக்கு இருக்கிறதென்றால் தற்போது இவர் நடித்து வெளிவர இருக்கும் ரஜினி முருகன் படம் 40 கோடி ரூபாய்க்கு வியாபாரமாகும் அளவுக்கு உள்ளது.

பெரிய நடிகர்களின் படங்களுக்கு கூட இவர் அளவுக்கு மார்க்கெட் இல்லை என்பது அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

 

Post a Comment