ஹைதராபாத்: கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் பாகுபலி படம் இறுதிக் கட்ட பணிகளை எட்டியுள்ளது. இதன் இசை வெளியீடானது இந்த மாதம் 31ம் தேதியன்றுஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.
படத்தின் இசை வெளியீட்டிற்கே கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் செலவு செய்ய இருக்கின்றனர்.
சரித்திரப் படமாக எடுக்கப்பட்டு வரும் பாகுபாலியில் நடிகைகள் அனுஷ்கா, நித்யா மேனன், ஸ்ரீதேவி நடிகர்கள் பிரபாஸ், ராணா, சுதீப், சத்யராஜ் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றனர்.
ஜூலை மாதம் வெளியாகவுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.
விழாவில் சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ள இருக்கிறார்.
படத்தை சீக்கிரமா கண்ணுல காட்டுங்கப்பா.. வயசாயிடும் போல...!
Post a Comment