சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகரும் நடிகை சங்கீதாவின் கணவருமான கிரிஷ் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.
தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளர்கள் ஹீரோவாக மாறி வெற்றி பெற ஆரம்பித்த பின் பாடகர்களுக்கும் அந்த ஆசை வந்து விட்டது போலும்.ஏற்கனவே பல வருடங்களுக்கு முன் பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா விகடன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். படம் ஓடாததால் அந்த முயற்சியை அவர் கைவிட்டு விட்டார்.
இந்தப் படம் சொல்லப் படாத ஒரு காதலை மையமாக வைத்து எடுக்கப் பட்டு வருகிறது.மறைவதற்கு முன் கவிஞர் வாலி கடைசியாக இந்த படத்துக்கு பாடல்கள் எழுதி கொடுத்திருக்கிறார். அதுவும் மரணம் சம்பந்தப்பட்ட பாடல் தானாம்.
கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கும் இப்படத்தை எழுதி இயக்குபவர் புதுமுக இயக்குனர் தம்பி செய்யது இப்ராகிம்.படத்திற்கு இசை இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் சகோதரி ரஹைனா சேகர்.
படத்துல கிரிஷே பாடிருவாரு... செலவு மிச்சம்
Post a Comment