55 வயதைத் தொட்டார் மோகன்லால்!

|

திருவனந்தபுரம்: மோகன்லால் விஸ்வநாதன் ஐயர் என்ற நடிகர் மோகன்லாலின் பிறந்த நாள் இன்று. 1960 ம் ஆண்டில் பிறந்த மோகன்லால் இன்று தனது 55 வது வயதைத் தொட்டிருக்கிறார்.

மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இதுவரை சுமார் 324 படங்களில் நடித்திருக்கிறார். இவற்றில் மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட படங்களும் அடக்கம்.

Mohanlal Turns 55

நடிகர் மட்டுமல்லாது தயாரிப்பாளர், பாடகர் போன்ற பன்முகத் திறமைகளை கொண்டவர்.

1978ம் ஆண்டு திரையோட்டினம் என்ற மலையாள படத்தில் அறிமுகமானாலும் சிலபல காரணங்களால் அந்த படம் வெளிவாராமல் போய்விட்டது. எனவே இவரது அடுத்தப் படமான மஞ்சில் விரிஞ்ச பூக்கள் தான் ஒரு ஹீரோவாக இவரை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியது.

நடிகர் மோகன்லாலைப் பற்றிய சில சுவையான தகவல்கள்:

6ம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் நடந்த ஒரு விழாவில் சிறந்த நடிகர் என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிறார்.

நடிகை ஐஸ்வர்யா ராயின் முதல் ஹீரோ மோகன் லால்தான். படம் இருவர்.

இவர் நடித்த குரு படம் தென்னிந்திய மொழிகளில் இருந்து முதல் முறையாக சிறந்த அயல் மொழித் திரைப்படம் என்ற பிரிவில் ஆஸ்கருக்கு நாமினேட் செய்யப் பட்டது.

நமது பெருமை மிக்க இந்திய ராணுவத்தால் மரியாதை செய்யப்பட்ட முதல் இந்திய நடிகர்.

நான்கு தேசிய விருதுகளை வாங்கி இருக்கிறார். வனப்பிரஸ்தம், பரதம் போன்ற படங்களில் நடித்தற்காக 2 தேசிய விருதுகள், வனப்பிரஸ்தம் படத்தைத் தயாரித்ததற்காக 1 தேசிய விருது , கிரீடம் படத்திற்காக ஒரு ஸ்பெஷல் ஜூரி விருது என மொத்தம் நான்கு தேசிய விருதுகள்.

மொத்தம் 9 கேரள அரசின் விருதுகளை இதுவரை பெற்றிருக்கிறார்.

2001 ம் ஆண்டு மற்றும் ஒரு சிறப்பாக பத்மஸ்ரீ விருதை இவருக்கு வழங்கி கவுரவித்தது அரசு.

கொரிய தற்காப்புக் கலைகளுக்கான ப்ளாக் பெல்ட்டை கொரிய மாஸ்டரான லீ ஜென்ஜோங்கி என்பவர் 2013 ம் ஆண்டு மோகன்லாலுக்கு வழங்கி லாலை கவுரவித்தார்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சேட்டா....!

 

Post a Comment