மும்பை: சென்னை எக்ஸ்பிரஸ் என்ற மெகா வெற்றிப் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ரோஹித் ஷெட்டி நடிகர் ஷாருக்கானை இயக்கும் இரண்டாவது படம் தில்வாலே. இந்தப் படத்தில் நாயகியாக நடிப்பவர் கஜோல்.
இவர்களுடன் வருண் தவான், கீர்த்தி சனேன் ஆகியோரும் உடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்கள். ரோகித் ஷெட்டியின் படம் என்றால் கமர்சியலும் ஆக்சனும் கலந்தே இருக்கும்.
இந்தப் படத்திலும் அப்படி ஒரு அதிரடியான சண்டைக் காட்சியை எடுக்க இருக்கிறார்களாம். தண்ணீருக்கு அடியில் நடைபெறும் அந்த சண்டை மொரிசியசில் படம் பிடிக்கப் பட உள்ளதாம்
தற்போது கோவாவில் ஷூட்டிங் நடைபெறுகிறது இதை முடித்து விட்டு மொரிசியஸ் கிளம்புகிறது தில்வாலே படக் குழு.
Post a Comment