மும்பை: ஜாக்கிசானுடன் நான் இணைந்து நடிக்கவில்லை என்று நடிகர் அமீர்கான் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா சீனா இடையே ஏற்பட்ட நல்லுறவின் காரணமாக இரண்டு நாடுகளும் இணைந்து படங்கள் தயாரிக்க உள்ளன. முதலில் இரு நாட்டின் பாரம்பரியங்களையும் இணைத்து குங்க்பூ யோகா என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டிருந்தனர்.
இந்தப் படத்தில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜாக்கியுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் இணைந்து நடிப்பதாக இருந்தது.அனால் அந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என்று தற்போது அமீர் திருவாய் மலர்ந்திருக்கிறார்.
தற்போது நடித்துவரும் டங்கல் படத்தால் வேறு படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்குவதில் பிரச்சினை ஏற்பட்டதால் இந்த முடிவாம்.
ஜாக்கி சானுடன் இணைந்து நடிக்க முடியாதது வருத்தமே என்று வருந்தியிருக்கிறார் அமீர். அடுத்த வருடம் ஜூன் வரை அமீரின் கால்ஷீட் புல்லாம். எதிர்காலத்தில் இதுபோன்ற படம்வந்தால் அதில் நிச்சயம் நடிப்பேன் என்று மேலும் கூறியிருக்கிறார்.
ஆமிர் இல்லை.. அப்ப வேற யாரு நடிக்கப் போறாங்க!
Post a Comment