கருணாநிதி தலைமையில் நடந்த அருள்நிதி திருமணம்

|

சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவரான நடிகர் அருள்நிதியின் திருமணம் இன்று காலை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடந்தது.

திமுகவின் தலைவரும், அருள்நிதியின் தாத்தாவுமான கலைஞர் கருணாநிதி இத்திருமணத்தை நடத்தி வைத்தார்.

Arulnidhi  Marriage Reception: Rajinikanth, Other Celebs Wish Newlywed Couple

இயக்குநர் பாண்டிராஜின் வம்சம் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் அருள்நிதி.

இரண்டாவதாக அருள்நிதியின் நடிப்பில் வெளிவந்த மௌனகுரு படம் இவருக்கு நல்ல ஒரு பிரேக்கை தமிழ் சினிமாவில் கொடுத்தது, தொடர்ந்து தகராறு, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் போன்ற படங்களில் நடித்த அருள்நிதி சமீபத்தில் வெளிவந்த டிமாண்டி காலனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் வசூல் நடிகராகவும் மாறிவிட்டார்.

கருணாநிதியின் மகன் மு.க. தமிழரசுவின் மகனான அருள்நிதிக்கும், சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்னால் நீதிபதியின் மகளான கீர்த்தனாவிற்கும் கடந்த மார்ச் மாதத்தில் நிச்சயதார்த்தம் பெரியவர்களின் தலைமையில் நிகழ்ந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது இன்று காலை திருமணம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கியமான பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருமணத்துக்கு முக அழகிரியும் குடும்பத்துடன் வந்து வாழ்த்தினார்.

முன்னதாக நேற்று மாலை நடந்த திருமண வரவேற்புக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பார்த்திபன், பிரபு,கார்த்தி, சூரி மற்றும் விஷால் என ஏராளமான நடிகர்களும், இயக்குனர் ஹரி, பாரதிராஜா, விஜய் ஆண்டனி,மற்றும் ஏ.வி.எம் சரவணன் ஆகியோர் நேரடியாக வந்து மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.

 

Post a Comment