திருவனந்தபுரம்: ஓ காதல் கண்மணி மற்றும் வாயை மூடி பேசவும் போன்ற தமிழ் படங்களில் நடித்து ஏராளமான இளம் ரசிகைகளின் நெஞ்சங்களைக் கவர்ந்த மலையாள இளம் நடிகர் துல்கர் சல்மானின் 29 பிறந்த தினம் இன்று.
1986 ம் ஆண்டு கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் மம்முட்டி - சல்பத் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த துல்கர் சல்மான் 2012 ம் ஆண்டில் செகண்ட் ஷோ என்ற முதல் படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார்.
நடிக்க வந்து 3 வருடங்களில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் சேர்த்து சுமார் 17 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். தமிழில் வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் அறிமுகமான துல்கருக்கு அந்த படம் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.
ஆனால் மணிரத்னத்தின் இயக்கத்தில் அடுத்து வந்த ஓ காதல் கண்மணி திரைப்படம் தமிழில் நல்ல ஹிட் அடித்ததுடன், தமிழ் ரசிகர்களிடம் துல்கரை கொண்டு சேர்த்த விதத்திலும் பெரிதும் உதவியிருக்கிறது.
உஸ்தாத் ஹோட்டல் மற்றும் பெங்களூர் டேஸ் போன்ற சிறந்த படங்களில் நடித்த துல்கர், தமிழில் அடுத்ததாக இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து நடிக்க விருக்கிறார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் துல்கரை மற்றவர்களுடன் இணைந்து நாமும் வாழ்த்துவோம்...பிறந்தநாள் வாழ்த்துக்கள் துல்கர் சல்மான்.
Post a Comment