சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அடுத்த 2 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சரத்குமார் தலைவராகவும், ராதாரவி பொதுச் செயலாளராகவும் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்த ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விஷால் தரப்பினர் இந்தத் தேர்தலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் தேர்தல் நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் சங்கத் தேர்தலை 2 மாதங்களில் நடத்தி முடிக்க உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நியமனம் செய்தது.
வரும் தேர்தலில் சரத்குமார், ராதாரவி தலைமையிலானவர்கள் ஒரு அணியாகவும், விஷால், நாசர், கார்த்தி உள்ளிட்டோர் எதிர் அணியாகவும் நின்று சந்திக்கவிருக்கிறார்கள்.
Post a Comment