ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீசாகிறது வாலு... அறிவித்தார் டி.ஆர்.

|

சென்னை: சிம்பு நடித்த வாலு படம் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீசாவதாக அவருடைய தந்தையும், நடிகர், இயக்குநருமான டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார்.

விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள படம் 'வாலு'. நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிட இருக்கிறது.

ஜூலை 17-ம் தேதி 'வாலு' படம் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், 'வாலு' படத்தை தடை செய்ய வேண்டும் என்று மேஜிக் ரேஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

VAALU TO ARRIVE FINALLY !

உயர் நீதிமன்றம் தடை விதித்ததால் வாலு' ரிலீஸ் ஆகவில்லை. தற்போது, மேஜிக் ரேஸ் நிறுவனம் தனது வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. இதனால், படம் ரிலீஸ் ஆவதில் இருந்த சிக்கல் விலகியது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் டி.ராஜேந்தர். அப்போது அவர் கூறியதாவது:-

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வாலு படம் அனைத்து வழக்குகளிலும் வென்று இம்மாதம் 14ம் தேதி ரிலீசாகிறது. நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கும், மேஜிக் ரேஸ் நிறுவனத்திற்கும் இடையேயான வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இது மட்டுமல்ல வாலு படம் தொடர்பான அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்துள்ளன. இதற்கு உறுதுணையாக இருந்த மீடியா உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

முன்னதாக, 'வாலு' படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதற்காக நடிகர் விஜய் பண உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment