தூம் 3 சாதனை காலி.. இந்திய அளவில் வசூலில் 3வது இடத்தைப் பிடித்தது பாகுபலி

|

சென்னை: கடந்த மாதம் 3 ம் தேதி வெளியான பாகுபலி திரைப்படம் திரையிட்ட இடமெல்லாம் வெற்றிவாகை சூடியது. வசூலில் சாதனை தென்னிந்திய மொழிகளில் அதிகம் வசூலித்து சாதனை மிக வேகமாக 200 கோடியைக் கடந்து சாதனை என பல்வேறு சாதனைகளைப் படைத்த பாகுபலி தற்போது மேலும் ஒரு புதிய சாதனையை படைத்து இருக்கிறது.

Baahubali - The Beginning (Tamil) (U/A): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

இந்திய அளவில் அதிகம் வசூலித்த திரைப்படங்களில் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி 3 ம் இடத்தைப் பிடித்து இருக்கிறது, சுமார் 545 கோடிகளை வசூலித்து இந்த சாதனையைப் பாகுபலி படைத்து இருக்கிறது.

Baahubali: 3rd Highest Grossing Indian Film

முதல் 2 இடங்களில் முறையே அமீர்கானின் பிகே சல்மான் கானின் பஜ்ரங்கி பைஜான் ஆகிய ஹிந்திப் படங்கள் உள்ளன, மூன்றாவது இடத்தில் முதன்முறையாக ஒரு தென்னிந்தியத் திரைப்படம் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.

இதற்கு முன்பு அமீர்கானின் தூம் 3 உலகம் முழுவதும் 542 கோடியை வசூலித்து அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் 3 ம் இடத்தில இருந்தது, தற்போது பாகுபலி 3 கோடி ரூபாய் அதிகம் வசூலித்து தூம் 3 யை பின்னுக்குத் தள்ளி இந்தப் பட்டியலில் முன்னுக்கு வந்துள்ளது.

அமீர்கானின் பிகே திரைப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு சீனா போன்ற நாடுகளில் வெளியானதைப் போல பாகுபலியும் வெளியானால், பிகே படத்தின் வசூலை முறியடித்து முதல் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு பாகுபலிக்கு இருக்கிறது பார்க்கலாம்.

 

Post a Comment