சென்னை: 2010 ம் ஆண்டு சீனு ராமசாமியின் இயக்கத்தில் தென்மேற்குப் பருவகாற்று திரைப்படத்தில், நாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி இன்று தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார்.
சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம், புறம்போக்கு என்கின்ற பொதுவுடைமை போன்ற படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்த விஜய் சேதுபதி தொடர்ந்து நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியாகிய ஆரஞ்சு மிட்டாய் திரைப்படத்தில் 55 வயது முதியவராக நடித்து அசத்திய விஜய் சேதுபதி, அடுத்ததாக போலீஸ் வேடத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்த மாகியிருக்கிறார்.
பண்ணையாரும் பத்மினியும் அருண்குமார் இயக்கத்தில் ஒரு வலுவான காவல்துறை அதிகாரியாக இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி, படத்திற்கு காசேதுபதி எனப் பெயரிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காக்க காக்க படத்தில் சூர்யா நடித்தது போன்ற ஒரு வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.
Post a Comment