தாயின் பெயரில் கல்வி அறக்கட்டளை தொடங்கினார் விஷால்.. 16 மாணவிகளுக்கு உதவி!

|

தனது தாயின் பெயரால் கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் விஷால், 16 ஏழை மாணவிகள் உயர்கல்வி பயில உதவி செய்துள்ளார்.

நடிகர் விஷால் கடந்த சில மாதங்களாக கல்வி உதவி செய்வதில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு நிறைய உதவிகள் செய்கிறார். அரசுப் பள்ளிகளை அடிக்கடி பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் தேவைப்பட்டால் செய்து தருகிறார்.

இப்போது இந்த உதவிகளைச் செய்ய ‘தேவி சமூகம் மற்றும் கல்வி அறக்கட்டளை' என்று தனது தாயார் பெயரில் அறக்கட்டளை தொடங்கியிருக்கிறார்.

Vishal starts educational trust in the name of his mother

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உதவிகள் செய்வதை முறைப்படுத்திடவே இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.

மறைந்த மேதை அப்துல்கலாம் கண்ட கனவின்படி, பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுவதே இதன் முக்கிய குறிக்கோள். அதன்படி கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி மாணவிகள் என 16 பேருக்கு ஏற்கனவே கல்வி உதவி செய்யப்பட்டுள்ளது,'' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Post a Comment