இரு "டார்லிங் பேய்"களின் டரியல் மோதல்...'மாயா' நயன்தாரா Vs 'நாயகி' த்ரிஷா!

|

நயன்தாரா பேயாக நடிக்கும் மாயா படத்துக்குப் போட்டியாக நாயகியில் நடிக்கவில்லை என்று த்ரிஷா கூறினார்.

த்ரிஷா பேய் வேடத்தில் நடிக்கும் புதிய படம் நாயகி இன்று தொடங்கியது.

இந்தப் படத்தின் தொடக்க விழாவில் பங்கேற்க வந்த த்ரிஷாவிடம், நயன்தாரா தற்போது ‘மாயா' என்ற பேய் படத்தில் நடிக்கிறார். அவருக்கு போட்டியாக நீங்களும் இந்த பேய் படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேட்டனர்.

No competition with Nayanthara, says Trisha

அதற்கு பதிலளித்த த்ரிஷா, "நயன்தாராவுக்குப் போட்டியாக நான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. நயன்தாரா நடித்திருக்கும் ‘மாயா' படம் வேறொரு கதையம்சத்துடன் உருவாகியுள்ளது.

‘நாயகி' படத்தின் கதை வேறு. பேய் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடுதான் இந்த படத்தில் நடித்தேன். மற்றபடி, எனக்கும் நயன்தாராவுக்கும் போட்டி கிடையாது," என்றார்.

 

Post a Comment