பிரபு தேவா தயாரிக்கும் வினோதன்... ஹீரோவாகிறார் ஐசரி வேலன் பேரன்!

|

பிரபு தேவா ஸ்டுடியோஸ் மூலம் பிரபு தேவா தயாரிக்கும் மூன்று படங்களில் ஒன்றான 'வினோதன்' படத்தில் நடிக்கும் மறைந்த பிரபல நடிகர் ஐசரி வேலனின் பேரன் புது முகம் வருண் நாயகனாக அறிமுகமாகிறார்.

அவருக்கு இணையாக வேதிகா நடிக்கிறார். இதுகுறித்து வேதிகா கூறுகையில், "இயக்குvர் விக்டர் என்னிடம் கதை சொல்ல அணுகும் போது, பிரபு தேவா சாருடைய நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படம் என்றவுடன் மிகவும் உற்சாகமானேன்.

Isari Velan's grandson makes debut in Vinothan

கதையைக் கேட்டவுடன் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி, அவ்வளவு நேர்த்தியான கதை. 'பரதேசி', 'காவிய தலைவன்' ஆகிய படங்களின் கதாபாத்திரத்தைப் போலவே வித்தியாசமான, மிகவும் சவாலான கதாபாத்திரம்தான் இந்தப் படத்திலும் எனக்கு.

'வினோதன்' மனோதத்துவத்தின் பின்னணியில் உருவாகும் ஒரு த்ரில்லர் கதை. இயக்குநர் விக்டர் தன்னுடைய கதா பாத்திரம் எப்படி நடிக்க வேண்டும் என்பதைக் குறித்து ஒரு ஆய்வே செய்து வைத்திருக்கிறார். அதன் அடிப்படையில் அவர் எனக்கும், கதாநாயகன் வருனுக்கும் ஒரு நடிப்பு பயிற்சி வகுப்பு எடுக்க உள்ளார். இந்த வகுப்பு வளர்ந்து வரும் என்னை போன்ற நடிக -நடிகையருக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாகும்.

'வினோதன்' மூலம் என்னுடைய நெடு நாள் கனவு நிறைவு பெற உள்ளது. நான் சிறு வயதில் இருந்தே பிரபு தேவா சாருடைய தீவிர விசிறி. இப்பொழுது ஒரு நடிகையாக அவருடைய தயாரிப்பில் நடிக்க போவதை எண்ணி மிகவும் சந்தோஷப்படுகிறேன். அவருடைய இயக்கத்திலும், அவருக்கு இணையாகவும் நடிக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்," என்றார்.

 

Post a Comment