சிம்புவின் அடுத்த அதிரடி .. நாளை முதல் அச்சம் என்பது மடமையடா... டீசர்!

|

சென்னை: இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அச்சம் என்பது மடமையடா திரைப்படம் தற்போது இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து படத்தின் டீசரை நாளை வெளியிடத் தீர்மானித்து இருக்கின்றனர் படக்குழுவினர், படத்தின் நாயகன் சிம்பு இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு செய்தியை உறுதி செய்திருக்கிறார்.

Achcham Yenbathu Madamaiyada Teaser

விண்ணைத்தாண்டி வருவாயா மாபெரும் வெற்றிக்குப் பின்னர் கவுதம் மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரகுமான் மற்றும் தாமரை ஆகியோர் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

சிம்பு, ராணா, மஞ்சி மோகன் இணைந்து நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறார் கவுதம் மேனன்.

இந்நிலையில் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் " ஒரு அழகான ரொமாண்டிக் படமாக உருவாகியிருக்கும் அச்சம் என்பது மடமையடா, திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகிறது. கடவுள் அருளால் படத்தின் டீசர் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்"என்று கூறியிருக்கிறார்.

சிம்புவின் திரைவாழ்க்கையில் இனி அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று சொல்லாமல் சொல்லுவது, போன்று அடுத்தடுத்த படங்கள் சாரின் பங்களிப்பில் வரிசை கட்டி நிற்கின்றன.

நீங்க கலக்குங்க எஸ்.டி.ஆர்.....

 

Post a Comment