சென்னை: டார்லிங் நாயகன் ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, படத்திற்கு ஏ சர்டிபிகேட் வழங்கியிருக்கிறது சென்சார் போர்டு.
ஜி.வி.பிரகாஷ், கயல் ஆனந்தி, மனிஷா யாதவ் மற்றும் சிம்ரன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா. அறிமுக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் இப்படம் நகைச்சுவை கலந்த காதல் படமாக தயாராகியிருக்கிறது.
செப்டம்பர் 17 ம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் சமீபத்தில் சென்சார் போர்டிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது, படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு வயது வந்தவர்கள் (18 வயது மேற்பட்டவர்கள்) மட்டும் பார்க்கும் வகையில் ஏ சர்டிபிகேட் வழங்கியிருக்கின்றனர்.
படத்தில் இடம்பெறும் அளவுக்கு அதிகமான முத்தக் காட்சிகள் மற்றும் பாடல் போன்ற காரணங்களுக்காக படத்திற்கு ஏ சான்றிதழை வழங்கியிருக்கின்றது சென்சார் போர்டு.
தமிழில் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்ற பெயரில் வெளியாகும் இத்திரைப்படம் தெலுங்கில் த்ரிஷா லேடா நயன்தாரா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட இருக்கிறது.
செப்டம்பர் 17 ம் தேதி வெளியாகும் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா திரைப்படம் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் மற்றும் கவுண்டமணியின் 49 ஓ ஆகிய படங்களுடன் மோதவிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆக மொத்தம் சீனியர் கவுண்டமணியுடன் மோதத் தயாராகி விட்டார் ஜி.வி.பிரகாஷ், வெற்றிக்கனியை பறிப்பாரா பார்க்கலாம்...
Post a Comment