ஏழாம் அறிவு படத்துக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் ஜோடி சேர்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.
கமல் ஹாஸன் மகள் ஸ்ருதி தமிழில் நாயகியாக அறிமுகமான படம் ஏழாம் அறிவு. ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்தார்.
இப்போது அஜீத், விஜய் என்று முன்னணி நடிகர்களின் நாயகியாகிவிட்டார் ஸ்ருதி.
தெலுங்கு, இந்தியிலும் முன்னணி நாயகியாகத் திகழும் இவர், மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கிறார்.
ஹரி இயக்கும் சிங்கம் 3 படத்தின் நாயகிகளில் ஒருவராக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கம் மற்றும் சிங்கம் 2-ல் நாயகியாக நடித்த அனுஷ்காவும் இந்தப் படத்தில் நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
சூர்யா இப்போது விக்ரம் குமார் இயக்கத்தில் 24 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் முடிந்ததும் இம்மாத இறுதியில் சிங்கம் 3-ல் நடிக்கிறார்.
Post a Comment