என் குழந்தைகள் தான் என்னோட தற்போதைய டீச்சர்ஸ்... ஷாரூக் பெருமிதம்

|

மும்பை: தன் குழந்தைகள் தான் தன்னுடைய ஆசிரியர்கள் எனத் தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் ஷாரூக் கான்.

ஆசிரியர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. நேரிலும், சமூக வலைதளப் பக்கங்கள் வாயிலாகவும் தங்களது ஆசிரியர்களை மக்கள் நினைவு கூர்ந்தனர்.

My kids are my teacher: Shah Rukh Khan

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கான், தனது டிவிட்டர் பக்கத்தில் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் அதில், ‘எனது குழந்தைகள் தான் தற்போது என் ஆசிரியர்கள். அவர்கள் தான் எனக்கு எவ்வாறு பொறுமையாக, மென்மையாக இருப்பது, அளவில்லாத அன்பு செலுத்துவது, வெட்கமில்லாமல், காரணமில்லாமல் சிரிப்பது போன்றவற்றை எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளனர்' என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது 49 வயதாகும் ஷாரூக், கடந்த 1991ம் ஆண்டு கௌரியை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு ஆர்யன் (17), சுஹானா (15) மற்றும் அப்ராம் (2) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ஷாரூக்கின் இந்தப் பதிவிற்கு பதிலளித்துள்ள ரசிகர் ஒருவர், "நீங்கள் தான் என் ஆசிரியர். உங்கள் படங்களைப் பார்த்து தான் நான் எவ்வாறு வாழ்வது எனக் கற்றுக் கொண்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment