சென்னை: "தமிழ் சினிமாவின் தில்லான மற்றும் துணிச்சலான கிளைமாக்ஸாக த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தின் கிளைமாக்ஸ் இருக்கும்" என்று படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
டார்லிங் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
இவருக்கு ஜோடியாக இந்தப் படத்தில் கயல் ஆனந்தி மற்றும் மனிஷா யாதவ் ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கின்றனர், படத்தை அறிமுக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தை பற்றி இயக்குநர் ரவிச்சந்திரன் " தமிழ் சினிமாவின் மிகவும் துணிச்சலான கிளைமாக்ஸ் என்று இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் பாராட்டப்படும்.
இந்த மாதிரி படத்தின் முடிவை எடுக்க ஒரு தைரியம் வேண்டும், படத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த முடிவை ரசிகர்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறியிருக்கிறார்.
மேலும் இந்தப் படத்திற்காக சுமார் 78 காட்சிகளை நான் கட் செய்தேன், கடைசியில் படம் சென்சார் போர்டுக்கு சென்றபோது மேலும் 2 முத்தக் காட்சிகளை நீக்கினால் படத்திற்கு யூ சான்றிதழ் அளிப்பதாகக் கூறினார்கள்.
ஆனால் நான் மறுத்து விட்டேன், நான் மறுத்ததால் படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்தது. சென்சார் போர்டின் இந்த முடிவை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.
விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா திரைப்படம் நயனின் மாயா மற்றும் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகனுடன் மோதவிருப்பது குறிப்பிடத்தக்கது.
படத்துல யாரு த்ரிஷா யாரு நயன்தாரா...
Post a Comment