தனது முன்னாள் உதவியாளர் ஜெயராமன் முதல் முறையாக தயாரித்துள்ள கிருமி படத்தின் போஸ்டர்களில், ரஜினி ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்துள்ளார்.
இந்த ஆட்டோகிராபுடன்தான் படத்தின் போஸ்டர்களும் டிசைன்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன.
கிருமி படத்துக்கு காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டன் கதை திரைக்கதை அமைத்துள்ளார். கதிர், ரேஷ்மி மேனன் நடித்துள்ள இந்தப் படத்தை அனுசரண் இயக்கியுள்ளார்.
இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.
படத்துக்கு பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் படம் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தன் சார்பில் யாரையாவது அனுப்பி வைத்து வருகிறார் ரஜினி. ஜெயராமனை வீட்டுக்கே அழைத்து வாழ்த்தும் தெரிவித்துவிட்டார்.
இப்போது படத்தின் போஸ்டர்களில் காட் ப்ளஸ் என ஆங்கிலத்தில் எழுதி, தமிழில் ரஜினிகாந்த் என ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்துள்ளார். இதையே அனைத்து விளம்பரங்களிலும் பயன்படுத்தியுள்ளார் தயாரிப்பாளர் ரஜினி ஜெயராமன்.
Post a Comment