மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தங்கை அர்பிதா கான் கர்ப்பமாக உள்ளாராம்.
நடிகர் சல்மான் கானின் செல்லத் தங்கையான அர்பிதா கானுக்கும், ஆயுஷ் சர்மாவுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் திருவிழா போன்று ஒரு வார காலம் கோலாகலமாக நடைபெற்றது.
திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில் அர்பிதா கர்ப்பமாக இருப்பதாக அவரின் தந்தை சலிம் கான் அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அர்பிதாவுக்கு குழந்தை பிறக்க உள்ளதாம்.
அர்பிதா என்றால் சல்மான் கானுக்கு உயிர் ஆகும். திருமண நிகழ்ச்சியில் அர்பிதாவை கடுப்பேற்றிய ஆடை வடிவமைப்பாளரை சல்மான் கொலவெறியுடன் தேடியது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
பஜ்ரங்கி பாய்ஜான் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டான சந்தோஷத்தில் இருக்கும் சல்மான் கான் தற்போது மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கேட்டு மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்.
Post a Comment