நடிகர் குணால் தற்கொலை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

|

Kunal
மும்பை: பிரபல தமிழ் திரைப்பட நடிகர் குணாலின் தற்கொலை வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் தற்கொலை செய்து கொண்டார் குணால். அவர் தற்கொலை செய்த சமயத்தில் அவருடன் இந்தி நடிகை லோவினா பாடியா என்பவர் இருந்தார். குணாலுக்கு அனுராதா என்ற மனைவி இருக்கிறார். ஆனால், குணாலுக்கும், லோவினாவுக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும், திருமணம் செய்யுமாறு லோவினா கொடுத்த நெருக்கடியாலேயே குணால் தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து, நடிகை லோவினா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மும்பை உயர்நீதி மன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்குமாறு மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடிகை லோவினா வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், “சம்பவம் நடந்த அன்று குணால் வீட்டுக்கு நானும், எனது ஆடை வடிவமைப்பாளரும் சென்றிருந்தோம். ஆடை வடிவமைப்பாளர் புறப்பட்ட பிறகு, இரவு 9 மணி அளவில் நான் பாத்ரூமுக்கு சென்றேன். பின்னர், 20 நிமிடங்கள் கழித்து வெளியே வந்தபோது, மேற்கூரையில் குணால் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை முடிவடைந்ததால், தீர்ப்பை செசன்ஸ் நீதிமன்றம் நேற்று ஒத்தி வைத்தது.
 

Post a Comment