தமிழ் 3டி படத்துக்கு ஹாலிவுட் கேமரா

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழ் 3டி படத்துக்கு ஹாலிவுட் கேமரா
2/11/2011 3:30:14 PM
'அம்புலி 3 டி’ படம் பற்றி டைரக்டர்கள் ஹரிசங்கர், ஹரீஷ் நாராயண் கூறியது: கிராமங்களில் பாட்டி சொன்ன கட்டுக்கதைகள் காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருக்கும். அது உண்மையா? பொய்யா? என்பதே கதை. 1978ம் ஆண்டில் நடப்பதுபோல் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஹீரோவாக வேட்டைக்காரன் வேடத்தில் நடிக்கிறார் பார்த்திபன். மேலும் அஜெய், ஸ்ரீஜித், சனம், திவ்யா நடிக்கின்றனர். இப்படத்தை 3 டியில் உருவாக்க வேண்டும் என்று இதன் தயாரிப்பாளர் வி.லோகநாதனிடம் சொன்னபோது வித்தியாசமான முயற்சி என்றார். கோவை, மேட்டுப்பாளையம் பகுதியில் இதன் ஷூட்டிங் நடக்கிறது. அப்பகுதியில் உள்ள காட்டுக்குள் 3 டி கேமராவுடன் யதார்த்தமான சண்டை காட்சிகளை படமாக்கினோம். அடர்ந்த காட்டுபகுதியே திகிலுட்டும் வகையில் படமாகிறது. வியூ பாயின்ட் என்ற கேமராவில் 'ஓர் இரவுÕ என்ற படத்தை இயக்கினோம். அடுத்த முயற்சியும் மாறுபட்டதாக இருக்க வேண்டும் என்பதன் விளைவுதான் ‘அம்புலி’ படம். இதற்காக அமெரிக்காவிலிருந்து 3 டி கேமரா வரவழைக்கப்பட்டு உள்ளது. சாதாரண கேமராவில் ஒரு லென்ஸ் இருக்கும். இந்த கேமராவில் 2 லென்ஸ்கள் உண்டு. ஹாலிவுட்டை சேர்ந்த 3 டி டெக்னிஷியன் டேன் என்பவரிடம் இதற்காக பயிற்சி பெற்றோம்.


Source: Dinakaran
 

Post a Comment