உறுமி படத்தில் நான் நடிக்கவில்லை
2/12/2011 10:52:16 AM
சந்தோஷ் சிவன் இயக்கத்தில் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் உருவாகும் படம் ‘உருமி’. படத்தில் தபு, ப்ருத்விராஜ், ஜெனிலியா, பிரபுதேவா, வித்யாபாலன் ஆகியோர் நடித்துள்ளனர். பதினைந்தாம் நூற்றாண்டு பின்னணியில் வாஸ்கோடகாமாவின் கதையை எடுத்து வருகிறார் சந்தோஷ் சிவன். இந்த படத்தில் கெஸ்ட் ரோலாக விக்ரம் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிஸியாக இருப்பதால் அவருக்குப் பதில் ஆர்யா நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் இதனை ஆர்யா மறுத்துள்ளார். சந்தோஷ் சிவனின் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் உறுமியில் நான் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
Source: Dinakaran
Post a Comment