2/9/2011 11:37:43 AM
பிரபுதேவா இயக்கும் படத்தில் பெங்காலி பெண்ணாக நடிக்கிறேன் என்றார் சமீரா ரெட்டி. 'எங்கேயும் காதல்' படத்தை அடுத்து, விஷால் நடிக்கும் படத்தை இயக்குகிறார் பிரபுதேவா. இதில் ஹீரோயினாக நடிக்கும் சமீரா ரெட்டி கூறியதாவது: இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னை, தூத்துக்குடி, மற்றும் கொல்கத்தாவில் நடக்கிறது. கடந்த 5-ம் தேதி கொல்கத்தாவில் ஷூட்டிங் தொடங்கியிருக்க வேண்டும். சில காரணங்களால் அது தள்ளிப்போயுள்ளது. இதில் எனது கேரக்டர் பெயர் பாரோ. கொல்கத்தா பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவி. பிரபுதேவா இயக்கத்தில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. கவுதம் இயக்கத்தில் நான் நடித்துள்ள 'நடுநிசி நாய்கள்' வரும் 18-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் என் நடிப்பு பேசப்படும் விதமாக இருக்கும். இவ்வாறு சமீரா கூறினார்.
Post a Comment